Wednesday, March 3, 2010

நாறிக் கிடக்கும் தமிழ் ஊடகங்கள்!!!


தமிழ் ஊடகங்கள் தனது பொறுப்புக்களை மறந்து சமீப காலங்களாக, நான்கு சுவற்றுக்குள் விளக்கு பிடித்து கொண்டிருப்பது வேதனை. பொதுவாக அச்சு ஊடகங்கள் தங்களது வியாபார அரிப்பிற்காக தொடர்ந்து இப்படி செய்துகொண்டிருக்கின்றன. எத்தனையோ சமூக கடமைகள் வரிசையில் நிற்பதை புறந்தள்ளி விட்டு, காம சல்லாபங்களை மட்டுமே பிரதான படுத்தி அலசுவது தேவையற்ற ஓன்று. இதில் தொலைக்காட்சிகளும் களமிறங்கி பச்சை (ஊதா) பதிவுகளை வெட்கமில்லாமல் நமது வீட்டுக்குள் ஊடுருவல் செய்வதை தடுக்காமல், அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதை என்னவென்று சொல்வது?திரைப்படங்களில் கூட தடை செய்யப்படும் காட்சிகள் இன்றைக்கு தடை ஏதும் இல்லாமல் தொலைக்காட்சிகளில் விரிவது மாபெரும் அசிங்கம். இந்தவித செய்திகளை தொடர்ந்து வெளியிடுபவர்களுக்கு, சமூக அக்கறை இப்பதாக காட்டிகொள்வது எவரெஸ்ட் உயர நாடகம். உண்மையை சொல்லப்போனால் ஊடக வியாபாரிகளுக்கு நித்தியானந்தா போன்றவர்கள் தான் பொன் முட்டை இடும் வாத்துக்கள். அப்படி பார்த்தால் இவர்களை விட நித்தியானந்தா எவ்வளவோ மேல்.
-சின்னப் பையன்

1 comment:

  1. yes, your comments are 100% right thinking..supreb... by C.Ram - TCBM.

    ReplyDelete