குஷ்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அசிங்கமான பல கேள்விகளை கேட்டுள்ளது. இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் இன்பம் கொள்ள விரும்பினால் தக்க பாதுகாப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்பது குஷ்புவின் அறிவுரை. இதை எதிர்த்து வழக்கிட்ட வழக்கறிஞரை கேள்வி கேட்டு தாளித்த நமது மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய வினாக்களை கீழே பாருங்கள்.1) குஷ்புவின் பேச்சால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்களா?
2) உங்கள் குடும்ப பெண்கள் யாரும் குஷ்புவின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார்களா?
3)உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்களா?
இது போன்ற பல அற்புத கேள்விகள் அதில் அடக்கம். நீதிபதிகளை பார்த்து நான் கேட்கிறேன். குஷ்பு பேச்சு யாரையும் பாதிக்காது என்று சொன்னால் சினிமாவில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளும் யாரையும் பாதிக்காது தானே? பிறகு எதற்கு அதை தடுக்க சட்டம்? பாலியல் காட்சிகள் யாரையும் பாதிக்காது என்றால் பிறகு எதற்கு தணிக்கை துறை? குஷ்பு சமுகத்தில் பிரபலமான நபர். அவரின் பேச்சு நமது சமூகத்தால் நிச்சயம் கவனிக்கப்படும். ஒருவேளை குஷ்புவின் ஆலோசனையின் படி நமது வீட்டு பெண்கள் எல்லாம் கிளம்பி விட்டால் இந்த தேசத்தின் நிலை என்னவாகும்? நமது குடும்ப ஒழுக்க முறை சந்தி சிரிக்காதா? குஷ்புவின் பேச்சு நமது பெண்களுக்கு அறிவுரை என்று சொல்வதை விட நமது கலாச்சாரத்தை கேள்விக்கு உள்ளாக்கி விட்டார் என்பதே உண்மை. இதில் நீதிபதிகளின் பொறுப்பற்ற கேள்விகள் கண் மூடித்தனமானவை.
-சின்னப் பையன்
No comments:
Post a Comment