அன்பு ஊர்தி ஓட்டிகளே, உங்களையும் நம்பித்தான் இந்த உலகமே ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் லட்சோப லட்சம் பள்ளி இளம் சிட்டுக்களை உங்களிடம் விட்டுவிட்டு நாங்கள் வீட்டில் நிம்மதியாக இருப்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? அவசர அவசியத்திற்காக கொண்டு வரப்பட்ட செல் பேசிகளை, சாலையில் ஊர்தியை இயக்கி கொண்டே நீங்கள் கதைப்பதில் அத்தனை இன்பமா உங்களுக்கு?. உங்களை நம்பிய எங்களின் பல குடும்பங்களை இன்று கண்ணீரும் கம்பலையுமாக உலவ விட்டு விட்டீர்களே! இது தான் நீங்கள் எமக்கு அளிக்கும் பரிசா? எம் குடும்பத்தில் ஒருவராக எங்கள் பயணத்தில் வலம் வரும் நீங்கள், எங்களை இப்படி மீள முடியா சோகத்தில் அடிக்கடி ஆழ்த்துகிறீர்களே! நீங்கள் அடிக்கடி பலி கொடுக்கும் எம் பிஞ்சுகளை எந்த அரக்க தெய்வத்திற்கு காணிக்கை ஆக்க வேண்டுதல் வைத்திருந்தீர்கள்? அப்படி என்றால் நீங்கள் எல்லாம் சாலைகளில் நரபலி செய்து வைக்கும் இடைத் தரகர்களா? எங்களின் குடும்ப செல்வங்களின் உயிர்களை சாலையில் அடகு வைத்து நீங்கள் கதைப்பது அத்தனை அவசியமா? அதைப் பற்றி நீங்களே இனி முடிவெடுங்கள். -சின்னப் பையன்
No comments:
Post a Comment