Monday, March 22, 2010

கிரிக்கெட்'டு...

விளையாட்டு என்பது ஒரு தேசத்தின் அடையாளம். கஞ்சிக்கே வழி இல்லாத நாட்டில் கூட விளையாட்டில் வெற்றி பெறுவது ஒரு தன்மானப் பிரச்சனை. ஆனால் இந்த பாலாய் போன இந்தியாவில் தான் விளையாட்டு என்பது விளையாட்டுக்கு கூட அரசால் மதிக்கப் படுவதில்லை. விளைவு பணக்காரர்களின் பிடியில் விளையாட்டு. இந்த தேசத்தின் புகழை உயர்த்தி பிடிக்க வேண்டிய நமது வீரர்களின் கரங்கள் இன்றைக்கு பணத்திற்காக கோக்குகளையும், பெப்சிகளையும், மல்லையாக்களின் சாராய பாட்டில்களையும் விற்பனை செய்யும் சேல்ஸ் மேன்களாக மாறிப் போனது மிகப் பெரிய வேதனை. ஐ.பி.எல் போட்டிகளை சந்தை படுத்துவதில் வெற்றி அடைந்த லலித் மோடி மீண்டும் கோடிகளை குவித்திருக்கிறார். நமது புனே மற்றும் கொச்சி நகரங்களை அடிப்படையாக வைத்து நடைபெற்ற ஒரு பேரத்தில் 3200 கோடி பணத்தை அள்ளியதன் மூலம் எனக்கு எழும் ஒரு கேள்வி, இந்த நகரங்களின் பெயர்களை விற்பனை செய்ய இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? உலக பணக்காரர்களின் பொருட்களை விற்பனை செய்ய, நமது அப்பாவி வீரர்களின் திறமைகள் மோடி போன்ற தரகர்களிடம் அடகு போனதை இங்கு யார் அறிவார்? ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. வேகமாக ஓடும் ஒரு பொருள் விரைவாக அதன் சக்தியை இழக்கும். அதில் ஐ.பி.எல் கிரிக்கெட்டும் அடக்கம்.


-சின்னப் பையன்

No comments:

Post a Comment