நான் அடிக்கடி பத்திரிகைகளில் படித்தும், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பார்த்தும், கேட்டும் ரொம்பவே யோசித்த வார்த்தை ஒன்று உண்டு. அது,
வரலாறு காணாத பாதுகாப்பு.
அது என்ன வரலாறு காணாத பாதுகாப்பு? அப்படி வரலாறு கண்ட பாதுகாப்பு தான் என்ன? அதுவும் ஆண்டு முழுவதும் வரும் முக்கிய தினங்கள் குறித்த பாதுகாப்பை நமது ஊடகங்கள் இப்படி தான் வர்ணிக்கின்றன. (எ.கா: வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி இந்திய தலைநகர் தில்லியிலும் வரலாறு காணாத பாதுகாப்பாம்) ஆக ஓர் ஆண்டில் இத்தனை முறையா வரலாறு காணாத பாதுகாப்பு வரும்? அப்படி பார்த்தால் இது ஒரு கின்னஸ் சாதனை ஆகிவிடாதா?ஒரு மிகைப்படுத்தல் என்பதற்காக இப்படி ஒரு பொய் மூட்டையை தேன் தடவியா அவிழ்த்து விடுவது? அதுவும் இந்த ஒரே அர்த்தமற்ற உவமையை நமது தமிழ் செய்தியாளர் உலகம் ஏன் தொடர்ந்து சொல்கிறது? அதை மாற்ற முடியாதா? அதை இன்னும் அழகாய் சொல்வோமே! (வரலாறு காணாத பாதுகாப்பு என்பதைவிட, அதிஉயர் பாதுகாப்பு என்பது எப்படி?)
No comments:
Post a Comment