இருபது ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் நடந்த விஷ வாயு கசிவில் 20000 -க்கும் மேற்பட்டோரைs பலி வாங்கிய சம்பவத்திற்கு சமீபத்தில் இந்திய நீதிமன்றம் ஓன்று அற்புத தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை என்ன தெரியுமா? இரண்டு ஆண்டு சிறை தண்டானையாம். ஆஹா... என்ன ஒரு இந்த! கிட்டத்தட்ட ஒரு மாநகரின் மக்கள் தொகையை அப்படியே போட்டு விழுங்கிய அந்த சம்பவத்திற்கு இது தான் சரியான தீர்ப்பா? நமது தண்டனையை பார்த்து மேற்கத்திய ஊடகங்கள் வாய்விட்டு ஏளனமாக சிரிக்கின்றன. இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என இந்தியாவில் நடக்கும் ஒரு வழக்கை பற்றி அமெரிக்கா கருத்து கூறுகிறது. காரணம், இந்த அகோர படுகொலையை நடத்தி இந்தியா தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சன் ஒரு அமெரிக்கர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ இந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றுவதாக ஒப்பாரி வைக்கிறார்கள். இருபது ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது அந்த நீதிபதிக்கே வெளிச்சம். தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படாமல் இருந்தால் சரி. ஏனென்றால் இந்தியாவின் சட்டங்கள் மகத்தானவை.-சின்னப் பையன்
No comments:
Post a Comment